close
Choose your channels

சூப்பர் ஸ்டாருக்காக ஒரே ஒரு பாட்டுக்கு நடனம் ஆடும் ரெஜினா.

Monday, March 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட சுமார் 30 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை ரெஜினா. இவர் தற்போது ’கள்ளபார்ட்’, ‘கசடதபற’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் ’சூர்ப்பனகை’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சார்யா’ என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட ரெஜினா ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நடனக் காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாகவும் சிரஞ்சீவியுடன் நடனமாடியது தனக்கு சிறப்பான அனுபவம் என்றும் ரெஜினா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது ஐட்டம் டான்ஸ் போன்ற குத்தாட்ட டான்ஸ் கிடையாது என்றும் இது ஒரு திருவிழா பாடல் என்றும் இந்தப் பாடலில் சிரஞ்சீவியுடன் நடனமாடும் வாய்ப்பை இழக்க விரும்பாததால் இந்த பாடலில் நடனமாட தான் ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் தொடர்ந்து ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி நடிப்பில் கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ’ஆச்சாரியா’ திரைப்படம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகி வருகிறது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment