சேலஞ்ச்சுக்கு நீங்க ரெடியா? விலங்குகளின் தாகம் தீர்க்க அழைப்பு விடுத்து இருக்கும் பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறந்து கொண்டு இருக்கும் இளம் நடிகை ரெஜினா கெசண்ட்ரா. இவர் தமிழில் “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “ராஜதந்திரம்”, “மாநகரம்“, “சரவணன் இருக்க பயமேன்”, “சக்ரா” போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.
தற்போது “பார்ட்டி“, “கள்ளபார்ட்“, “கசடதபற“, “சூர்ப்பனகை“ போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிப்புடன் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் சமீபத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்து கொண்டு பரிசையும் தட்டிச்சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ரெஜினா தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “வாட்டர் பவுல் சேலஞ்ச் 2021“ ற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். அதாவது கோடைகாலத்தில் தண்ணீர் தாகத்தினால் தவிக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உதவி செய்யும் விதமாக ஆங்காங்கே சின்ன சின்ன பாத்திரங்களில் தண்ணீர் வைக்கும் பழக்கதை பல அமைப்புகள் ஊக்குவித்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு வழகத்தை People for cattle in India எனும் அமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா முழுவதும் பல இடங்களில் செயல்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டிற்கான இந்த சேலஞ்சில் நடிகை ரெஜினாவும் இணைந்து கொண்டுள்ளார். அந்த வகையில் விலங்குகள் மற்றும் பறவைகளின் தாகத்தை போக்குவதற்காக தெருக்கள், மொட்டைமாடி, வீடு முற்றம், கோயில் போன்ற இடங்களில் தண்ணீர் வைப்பதற்காக பொதுமக்களை நடிகை ரெஜினா ஊக்குவித்து வருகிறார். அதோடு PFCI சார்பாக இலவசமாக கிண்ணத்தை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கிண்ணத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளும் நபர்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் தாகம் எடுத்து வருந்தும் விலங்கு மற்றும் பறவைகளுக்கு தண்ணீரை வைத்தால் மட்டும் போதுமானது.
இப்படியொரு உத்வேகமான சேலஞ்ச்சில் தற்போது நடிகை ரெஜினா பங்கேற்று இருப்பது குறித்து பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த சேலஞ்ச்சிற்கு அழைப்பு விடுத்து இருக்கும் நடிகை ரெஜினா பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Summer is HERE and it’s getting very hot very fast! So I took up the #WaterBowlChallenge to help the street animals and birds. Thought it’s the least I could do. ??
— ReginaaCassandraa (@ReginaCassandra) March 31, 2021
I now nominate YOU to take up the #WaterBowlChallenge2021
An Initiative by @PFCII & Supported by @RoyalCanin pic.twitter.com/wMl1DujrUP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments