காரணமின்றி கணவருடன் உடலுறவு கொள்ளாமல் இருப்பது மனக் கொடுமைக்குச் சமம்… நீதிமன்றம் அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
விவகாரத்து கோரிய வழக்கு ஒன்றில் அலகாபாத் நீதிமன்றம் காரணமே இல்லாமல் நீண்ட காலம் தனது துணையோடு உடலுறவு கொள்ள சம்மதிக்காமல் இருப்பது மனக்கொடுமை செய்வதற்கு சமம் என்று கூறி விவகாரத்து வழங்கியிருக்கும் சம்பவம் கவனம் பெற்றுவருகிறது.
காவல் துறையில் பணியாற்றிவரும் ரவீந்திர பிரதாப் யாதவ் என்பவர் ஒரு பெண்ணை கடந்த 1979 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் திருமணம் செய்த பிறகு சிறிது காலம் மட்டுமே தனது மனைவியோடு பாலியல் உறவை அனுபவித்தாகவும் பின்னர் தனது மனைவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் பணிமாறுதல் பெற்று 6 மாதங்கள் கழித்து வீடு திரும்பிய அவர் தனது மனைவியின் நடத்தையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா? என்று கவனித்தாகவும் ஆனால் எந்த மாற்றமும் இல்லாமல் அவர் தன்னை விட்டுவிட்டு பெற்றோருடன் வசிக்க தொடங்கியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையடுத்து தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற விரும்பிய ரவீந்திரபிரதாப் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் பஞ்சாயத்து ஒன்றில் பேசி தனது மனைவிக்கு நிரந்தர ஜுவனாம்சமாக ரூ.22,000 – ஐ கொடுத்து விவாகரத்துப் பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரிந்து சென்ற மனைவி வேறொரு ஆணைத் திருமணம் செய்துகொண்டு அவர் மூலம் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்தாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தற்போது சட்டப்படி விவகாரத்துப் பெற வேண்டும் என்று விரும்பிய ரவீந்திர பிரதாப் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் விவகாரத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இந்தத் தீர்பபை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ரவீந்திரபிரதாப் மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் குடும்பநல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாற்றங்கள் எதையும் செய்வதற்கு வாய்ப்பில்லை. மேலும் தனது மனைவி வேறொரு திருமணம் செய்துகொண்டார் என்பதற்கான புகைப்பட ஆதாரத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஆனாலும் உடலுறவு கொள்ளாமல் பிரிந்து வாழ்ந்துவரும் இருவரையும் சேர்ந்து வாழச்சொல்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி விவாகரத்து தடையை நீக்கி விவாகரத்து வழங்கியுள்ளனர்.
மேலும் பேசிய நீதிபதிகள் எந்தவித காரணமும் இல்லாமல் தனது வாழ்க்கை துணையோடு உடலுறவு கொள்ள நீண்டகாலம் சம்மதம் தெரிவிக்காமல் இருப்பது மனக் கொடுமைக்குச் சமம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பு தற்போது பலரிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments