ரெட்மி நோட் 9 சீரிஸ் இந்தியாவில் எப்போ வரப்போகிறது தெரியுமா..?
- IndiaGlitz, [Tuesday,March 03 2020]
ரெட்மி நோட் 9 சீரிஸ் மார்ச் 12-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. புதிய தொடரில் ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ ஆகியவை அடங்கும்.
ஷாவ்மியின் ரெட்மி நோட் சீரிஸ் அதன் மலிவான விலைக்காக பிரபலமாக இருப்பதால், ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ இரண்டும் ரூ.20,000 விலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திங்களன்று ரெட்மி இந்தியா ட்விட்டர் கணக்கு வெளியிட்ட டீஸர் படத்தைப் பார்த்தால், ரெட்மி நோட் 9 சீரிஸ் குவாட் ரியர் கேமரா அமைப்போடு வரும். போன்களில் சதுர வடிவ கேமரா அமைப்பு இருக்கும்போல் தெரிகிறது. கேமரா அமைப்போடு, டீஸர் படம் புதிய ரெட்மி நோட்-சீரிஸ் போன்களில் விரைவான புதுப்பிப்பு வீதத்தை பரிந்துரைக்கிறது. 90Hz டிஸ்பிளேவை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
Mi.com வலைத்தளமும் Amazon India-வும் ஒரே மாதிரியான மைக்ரோசைட்டைக் கொண்டுள்ளன, இது புதிய ரெட்மி நோட் சீரிஸின் வேறு சில அம்சங்களைக் குறிக்கிறது. மைக்ரோசைட் அடுத்த தலைமுறை ரெட்மி போன்களில் புதிய வடிவமைப்பு, பிராசசர் மற்றும் கேமிங் அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது. இதேபோல், நிறுவனம் சமீபத்திய ரெட்மி நோட் மாடல்களில் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கிறது.
ரெட்மி இந்தியா யூடியூப் சேனல் மூலம் வெளியிட, ஒரு வீடியோவையும் Xiaomi உருவாக்கியுள்ளது. நவம்பர் 2014-ல், Redmi Note 4G, முதல் 4ஜி ஆண்ட்ராய்டு போனாக ரூ.10,000 விலை வரம்பில் அறிமுகப்படுத்தியது. புதிய ரெட்மி நோட் போன்கள் 5 ஜி ஆதரவுடன் Realme X50 Pro 5G மற்றும் iQoo 3-ஐ விட கணிசமாக மலிவு விலையில் வரும் என்று எதிர்பார்க்கலாம், இவை இரண்டும் நாட்டின் ஆரம்ப 5ஜி போன்களாகும்.