'பீஸ்ட்' படத்தின் மோஷன் போஸ்டர் எப்போது? ரெடின் கிங்ஸ்லி டுவிட்!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் வெளியான 'அரபிக்குத்து’ பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ’பீஸ்ட்’ மோஷன் போஸ்டர் நாளை வெளியாகும் என இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ரெடின் கிங்ஸ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் நாளை வெளியாகவிருக்கும் மோஷன் போஸ்டரை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.