ரெடின் கிங்ஸ்லி மனைவிக்கு ஏற்கனவே குழந்தை இருக்கிறதா? அவரே அளித்த விளக்கம்..!
- IndiaGlitz, [Sunday,May 19 2024]
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சீரியல் மற்றும் திரைப்பட நடிகை சங்கீதாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி அவர் குழந்தையுடன் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் விளக்கம் அளித்துள்ளார்
‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. அதன் பின்னர் ’எல்கேஜி’ ’டாக்டர்’ ’அண்ணாத்த’ ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது தமிழ் திரையுலகின் பிசியான காமெடி நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடிகை சங்கீதாவை அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் மற்றும் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்த நிலையில் நடிகை சங்கீதா ஒரு சில சீரியல்களிலும் ’பாரிஸ் ஜெயராஜ்’ ’மாஸ்டர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’எனக்கு குழந்தை இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்தி போடுகிறார்கள், அது என் சகோதரர் மகள், ஆனாலும் எனது மகள் என்று சொல்கிறார்கள், சரி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று நானும் விட்டுவிட்டேன்’ என்று கூறினார்.
தனது கணவர் ரெடின் கிங்ஸ்லி குறித்து கூறிய போது ’அவர் விட்டுக் கொடுக்கும் குணம் கொண்டவர், நான் என்ன தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்வார் என்று தெரிவித்தார். மேலும் பணத்துக்காக நான் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் என்னிடமே தேவையான அளவுக்கு பணம் இருக்கிறது என்றும் அவருடைய அரவணைத்து கொள்ளும் குணம் தான் என்னை ரொம்ப கவர்ந்தது’ என்றும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.