ஆமாம்.. நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான்.. நல்ல விஷயம் சொன்ன ரெடின் கிங்ஸ்லி மனைவி..!
- IndiaGlitz, [Thursday,December 26 2024]
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா தனது சமூக வலைதளத்தில், ஆமாம், நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது, என்று பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தொழிலதிபர், டான்சர் என கலக்கி கொண்டிருந்த ரெடின் கிங்ஸ்லி, 40 வயதுக்கு மேல் தான் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். நெல்சன் இயக்கத்தில் உருவான ’கோலமாவு கோகிலா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் ’டாக்டர்’ முதல் ’ஜெயிலர்’ வரை அவரது காமெடி ரசிகர்களை கவர்ந்தது .
இந்த நிலையில் தொலைக்காட்சி சீரியல் நடிகை சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்தது.
இந்த நிலையில் சன் டிவியில் ’ஆனந்த ராகம்’ என்ற தொடரில் நடித்து வந்த சங்கீதா, சமீபத்தில் அந்த தொடரில் இருந்து விலகினார். அப்போதே அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில், ஆமாம், நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க உள்ளது, என்று சங்கீதா தனது இன்ஸ்டாவில் உறுதி செய்துள்ளார். இதனை தொடர்ந்து, ரெடின் - சங்கீதா தம்பதிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.