செக்க செவேல்ன்னு ஒரு போட்டோஷூட்.. ரம்யா பாண்டியனின் வேற லெவல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,July 23 2023]

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் செக்க செவேல்ன்னு இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள ரம்யா பாண்டியன் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் ஒர்க் அவுட் வீடியோக்களையும் பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் சிவப்பு காஸ்டியூமில் வேற லெவலில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. கிளாமர் இல்லாமல் அதே நேரத்தில் மயக்கும் கண்களுடன் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.