பிரபாஸ் நடித்த 'சலார்' .. தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபாஸ் நடித்த ‘சலார்’ என்ற திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் புதிய ரிலீஸ் தேதியுடன், இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவிபஸ்ருர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ’கேஜிஎப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
We’re beyond excited to be partnering with @hombalefilms and presenting one of India’s most-awaited films #Salaar in Tamil Nadu.
— Red Giant Movies (@RedGiantMovies_) November 10, 2023
Brace yourselves for the cinematic spectacle #SalaarCeaseFire#Salaar #Prabhas #PrashanthNeel @PrithviOfficial @shrutihaasan @VKiragandur… pic.twitter.com/m6p759Y0qv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments