ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலான உச்ச நட்சத்திரங்களின் படங்களை ரிலீஸ் செய்து வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான அண்ணாத்தே, எதற்கும் தெரிந்தவன், பீஸ்ட், விக்ரம், திருச்சிற்றம்பலம், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, சர்தார், வாரிசு, துணிவு, அகிலன், விடுதலை உள்பட பல திரைப்படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது அருள்நிதி நடிப்பில் உருவான ’கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் மே 26 ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
கௌதம ராஜ் இயக்கத்தில், டி. இமான் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் நடித்த நடிகை துஷாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to join hands with @Olympiamovis once again. #KazhuvethiMoorkan Tamil Nadu Theatrical distribution by Red Giant Movies
— Red Giant Movies (@RedGiantMovies_) May 13, 2023
Strarring @arulnithitamil @officialdushara @ActorSanthosh, Directed by Raatchasi" @sy_gowthamraj@ambethkumarmla @Sridhar_DOP @immancomposer @cheqba… pic.twitter.com/2IGYAtLKTZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments