ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் இன்னொரு பிரபலத்தின் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சமீபத்தில் ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படத்தை வெளியிட்ட நிலையில் வரும் 9ஆம் தேதி வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’லால்சலாம்’ படத்தையும் வெளியிட உள்ளது.
அது மட்டும் இன்றி விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படமான ‘ரோமியோ’ என்ற திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ’சைரன் என்ற’ திரைப்படம் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்த வீடியோவை ஜெயம் ரவி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்று வருவதை அடுத்து ’சைரன்’ திரைப்படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செல்வகுமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி உள்ளது.
#Siren Tamilnadu theatrical release by @RedGiantMovies_ 🚨#SirenFromFeb16
— Jayam Ravi (@actor_jayamravi) February 1, 2024
A @gvprakash Musical @antonybhagyaraj @KeerthyOfficial @anupamahere @SamCSmusic @sujataa_HMM @MShenbagamoort3 @iYogiBabu @IamChandini_12 @AntonyLRuben @brindagopal @dhilipaction @selvakumarskdop… pic.twitter.com/H1jDCr7mGM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com