ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. டிசம்பர் 30ல் ரிலீஸ் என அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பல திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் ’எதற்கும் துணிந்தவன்’ ’பீஸ்ட்’, ‘டான்’; ’விக்ரம்’ ’திருச்சிற்றம்பலம்’ ’கோப்ரா’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட பல திரைப்படங்களை ரிலீஸ் செய்து உள்ளது. மேலும் ’வாத்தி’, ‘துணிவு’ ’இந்தியன் 2’ ஆகிய படங்களையும் இந்த நிறுவனம்தான் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிரபு சாலமன் இயக்கத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள ’செம்பி’ படத்தையும் ரெட் ஜெயண்ட் முவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்யும் இந்த படம் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வின், கோவை சரளா உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு நிவின் பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஜீவன் ஒளிப்பதிவில் புவன் படத்தொகுப்பில் தயாராகியுள்ளது.
We are extremely happy to announce our association with @prabu_solomon’s #SEMBI, releasing in cinemas near you on Dec 30th!@prabu_solomon @tridentartsoffl @Udhaystalin @i_amak #KovaiSarala @nivaskprasanna @tridentartsoffl @arentertainoffl #AjmalKhan @actressReyaa @teamaimpr pic.twitter.com/x4ZCVS42Ok
— Red Giant Movies (@RedGiantMovies_) November 25, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments