ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் செய்யும் அடுத்த பிரபலத்தின் படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களின் திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’, தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்பட பல வெற்றிப் படங்களை வெளியிட்டது என்பதும் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ உள்பட இன்னும் பல பிரபலங்களின் படங்களை வெளியிடவுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கானின் ’லால்சிங் சாதா’ என்ற திரைப்படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அத்வைத் சந்தன் என்பவர் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் வரும் அமீர்கான் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Proud and honoured to present the extraordinary journey of #LaalSinghChaddha.
— Red Giant Movies (@RedGiantMovies_) July 16, 2022
Tamil Nadu theatrical release by #RedGiantMovies ?? ??#AamirKhan #KareenaKapoorKhan @Udhaystalin @AKPPL_Official #AdvaitChandan @atul_kulkarni #KiranRao @chay_akkineni pic.twitter.com/h83GxIKiw6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments