ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு சென்ற பிரபல இயக்குனரின் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பிரபல நடிகர்களின் படங்களை தொடர்ச்சியாக ரிலீஸ் செய்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல இயக்குனரின் படத்தையும் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பல பிரபலங்களின் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ரஜினியின் ’அண்ணாத்த’ கமல்ஹாசனின் ’விக்ரம்’ தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ விக்ரமின் ’கோப்ரா’ உள்பட பல படங்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ கார்த்தியின் ’சர்தார்’ கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ ஆகிய படங்களையும் இந்நிறுவனம் தான் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’காபி வித் காதல்’ என்ற திரைப்படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Happy to associate with #SundarC’s #CoffeeWithKadhal.☕️??
— Red Giant Movies (@RedGiantMovies_) September 5, 2022
Releasing in cinemas on October 7️⃣th! @khushsundar @Udhaystalin #AvniCinemax #BenzzMedia @U1Records @JiivaOfficial @thisisysr @Actor_Jai @Act_Srikanth @ImMalvikaSharma @Actor_Amritha @DhivyaDharshini @raizawilson pic.twitter.com/mMtSEEEfvq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments