2023ஆம் ஆண்டின் முதல் அறிவிப்பு: ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடும் புதிய படம்!

  • IndiaGlitz, [Sunday,January 01 2023]

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பிரபல நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், திருச்சிற்றம்பலம், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், லவ் டுடே உள்ளிட்ட பல திரைப்படங்களை ரிலீஸ் செய்தது என்பதை பார்த்தோம்.

மேலும் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ’வாத்தி’ ’வாரிசு’ ’துணிவு’ ’இந்தியன் 2’ ஆகிய படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கவின் நடித்த ‘டாடா’ என்ற திரைப்படத்தை ரிலீஸ் செய்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது

இம்மாதம் வெளியாகும் இந்த படத்தில் கவின், அபர்ணா தாஸ், ஹரிஷ் குமார், மோனிகா, பாக்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையில் கணேஷ் பாபு இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.