close
Choose your channels

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் அடுத்த பெரிய படம்: அதிரடி அறிவிப்பா?

Tuesday, August 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாக தமிழ் திரையுலகில் வெளியாகும் பெரிய நட்சத்திரங்களின் படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் இந்நிறுவனம் ரிலீஸ் செய்ய பல படங்கள் வரிசையாக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி தற்போது தயாராகி வரும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் கூட ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு தான் செல்லும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் சற்று முன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் நள்ளிரவு 12.01 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் அடுத்த பெரிய படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் இன்றைய நள்ளிரவு அறிவிப்பு ரஜினியின் ’ஜெயிலர்’, அஜித்தின் ’ஏகே 61’, விஜய்யின் ’வாரிசு’ , கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, ஆகிய படங்களில் ஒன்றாக இருக்கலாம் என ரசிகர்கள் தஙகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்ப்பினும் இந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை நள்ளிரவு 12.01 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment