வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் செம அப்டேட் கொடுத்த உதயநிதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாகவும் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல இயக்குனர்கள் ராஜீவ் மேனன் மற்றும் கவுதம் மேனன் இணைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இசைஞானி இளையராஜாவின் இசையில் தனுஷ் ஒரு பாடல் பாடியதாகவும் கமல் ரஜினி ஆகிய இருவரும் இந்த படத்திற்கு குரல் கொடுத்ததாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ‘விடுதலை’ படத்தின் ஸ்டண்ட் காட்சிகளின் படப்பிடிப்பு கொடைக்கானல் மலையில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த ஸ்டண்ட் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்டென்ட் காட்சியை பீட்டர் ஹெய்ன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து ‘விடுதலை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மற்றும் முக்கிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டை அடுத்து விரைவில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என்றும் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
With an Intense action scenes choreographed by @PeterHeinOffl,it’s a schedule wrap for #VetriMaaran's #Viduthalai.
— Red Giant Movies (@RedGiantMovies_) September 19, 2022
More updates coming soon@VijaySethuOffl @sooriofficial @ilaiyaraaja @elredkumar @Udhaystalin @BhavaniSre @rsinfotainment @GrassRootFilmCo @mani_rsinfo @VelrajR pic.twitter.com/N1pViWc3TA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com