வெற்றிமாறனின் 'விடுதலை': சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ரெட் ஜெயண்ட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்த ’விடுதலை’ என்ற திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் நிலையில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. சூரி, விஜய் சேதுபதி உட்பட பலர் நடிப்பில் உருவான ’விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையின் வியாபாரம் முடிந்துவிட்டது என்பதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் மார்ச் 8ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து இந்த படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படத்தின் பாடல்களை கேட்க அனைத்து தரப்பினர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பல்ரது நடிப்பில் உருவான இந்த படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IT’S 8️⃣ MARCH - Save the date & get ready for Director #VetriMaaran’s #ViduthalaiPart1 audio and trailer launch.
— Red Giant Movies (@RedGiantMovies_) March 3, 2023
Coming soon in theatres. @ilaiyaraaja @VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @BhavaniSre @VelrajR @DirRajivMenon @menongautham @jacki_art pic.twitter.com/FkGADjhjR9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments