தீபாவளி ரிலீஸ் திரைப்படத்தை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட் மூவீஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,October 14 2023]

வரும் தீபாவளி திருநாளில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ மற்றும் கார்த்தி நடித்த ’ஜப்பான்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பது தற்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றில் ஒரு படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படம் தான் ’ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’.

எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்த இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார் என்பதும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தீபாவளி ரிலீஸ் நேரத்தில் அதிக திரையரங்குகள் இந்த படத்துக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட ’சித்தா’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ திரைப்படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஒரு டிக்கெட் கூட கவுண்டரில் இல்லை.. 4 நாட்களுக்கு ஹவுஸ்புல்.. விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்..!

சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் கவுண்டரில் ஒரு டிக்கெட் கூட கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு சில நிமிடங்களில் நான்கு நாட்களுக்கு உரிய 'லியோ' படத்தின் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக

'இரும்புக்கை மாயாவி' சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதை அல்ல.. லோகேஷ் கனகராஜ் ஆச்சரிய தகவல்..!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா, இரண்டு திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும், ஒன்று 'ரோலக்ஸ்' மற்றொன்று 'இரும்புக்கை மாயாவி' என்றும் கூறப்பட்டது.

அஜித் படத்தை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்? அவரே அளித்த பதில்..!

'மாநகரம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதனை அடுத்து  விஜய், சூர்யா, கார்த்தி, என முன்னணி நடிகர்களை இயக்கும் அளவிற்கு தற்போது உச்சத்தில் உள்ளார்.

தண்ணீர் பிரச்சனையை அரசியலுடன் கலந்து பேசிய கமல்ஹாசன்.. பிக்பாஸில் இன்று சம்பவம் இருக்கு..!

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் தோன்றும் எபிசோடு என்பதால் கூடுதல் விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நேரில் ரசிக்கும் 4 சூப்பர் ஸ்டார்கள்..!

கடந்த சில நாட்களாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது