close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் உரிமையை வாங்கியதா ரெட் ஜெயண்ட் மூவீஸ்?

Friday, July 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் நடித்த ’ஜவான்’ திரைப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்த ’ஜவான்’ திரைப்படத்தை அட்லி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

செப்டம்பர் 7ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ’ஜவான்’ திரைப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தெலுங்கு ரிலீஸ் உரிமையை தில் ராஜு வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்றும் ஷாருக்கானின் முந்தைய படமான ‘பதான்’ போலவே இந்த படமும் மிகப்பெரிய வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment