சிம்பு மீதான ரெட் கார்ட் குறித்து தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் விதித்து இருந்ததை அடுத்து தற்போது அந்த ரெட் கார்ட் மீது தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்த ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற திரைப்படத்திற்கு சிம்பு முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் அந்த திரைப்படத்தின் நஷ்டத்திற்கு சிம்பு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து விசாரணை செய்த தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு ரெட் கார்ட் விதித்தது. இதனை அடுத்து சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்திற்கு தொழிலாளர் சம்மேளன பெப்சியை ஒத்துழைப்பு அளிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் ஆதர்சமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிம்பு தரப்பில் இருந்தும் தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்தும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட்கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. இதனை அடுத்து சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பெப்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout