சூர்யா படங்களுக்கு ரெட் கார்ட்? தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி

  • IndiaGlitz, [Saturday,April 25 2020]

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. மேலும் மே 3ஆம் தேதி ஊரடங்கு முடிந்தாலும், மேலும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்படவில்லை என்றாலும் திரையரங்குகள் திறக்கப்பட இன்னும் ஒருசில மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஒருவேளை திரையரங்குகள் திறந்தாலும் முதலில் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகள் கிடைக்கும் என்பதால் சின்னபட்ஜெட் படங்களில் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த நிலையில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஒடிடி பிளாட்பாரத்தில் திரையிட பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தமும் செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அனேகமாக இன்னும் ஒருசில நாட்களில் இந்த படம் ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாகும் என தெரிகிறது.

இந்த நிலையில் திரையரங்குகளில் திரையிடாமால் நேரடியாக ஒடிடியில் திரையிட முடிவெடுத்த சூர்யா நிறுவனங்களுக்கும், அவர் சார்ந்த நிறுவனங்களுக்கும் ரெட் கார்ட் விதிக்கப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளிவர வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

இருப்பினும் இந்த தடை எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் இரண்டு மாதங்கள் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்றால் பல திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் எத்தனை பேர்களுக்கு ரெட்கார்ட் போட முடியும் என்றும் கோலிவுட் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்,

More News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு? மத்திய சுகாதார அமைப்பு தகவல்

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதிலும் நாளுக்கு கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.

தப்பாட்ட கலைஞர்களுக்கு உதவிய விஜய் ரசிகர் மன்றத்தினர் 

கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் மத்திய மாநில அரசுகள் மற்றும் அண்டை மாநில அரசுகளுக்கு என மொத்தம் 1.30 கோடி ரூபாய் நிதி உதவி செய்த தளபதி விஜய்,

இன்று முதல் ஊரடங்கு உத்தரவு தளர்வு: எந்தெந்த கடைகள் திறக்கலாம்!

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவை உள்ள கடைகள் மட்டுமே திறக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

லாக்டவுன் நீடித்தால் 4 கோடி இந்தியர்களின் மொபைல் போன்களுக்கு ஆபத்து! அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் லாக்டவுன் மே 3ஆம் தேதிக்கு பின்னர் நீட்டித்தால் 4 கோடி இந்தியர்களின் மொபைல் போன்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இது முழுக்க முழுக்க பொய்: ஜோதிகா விவகாரம் குறித்து விஜய்சேதுபதி!

நடிகை ஜோதிகா சமீபத்தில் தஞ்சை பெரிய கோயில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வரும் நிலையில்