ஊரடங்கிலும் ரெட் அலார்ட்... தருமபுரியின் அவலத்தை கூற எம்.பி போட்ட டுவிட்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால் அங்கு, ரெட் அலர்ட் போடவேண்டும் என திமுக எம்பி டுவிட் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நேற்று ஒரு நாளில் மட்டும் இந்த தொற்றால் 293 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் கோவிட் பாதிப்பு உச்சத்தில் உள்ளது என்றே சொல்லலாம். நேற்று ஒரு நாளில் மட்டும் அங்கு 197 நபர்களுக்கு கொரோனா பரவ, இதனால் மொத்த பாதிப்பு 12,284 -ஆக உயர்ந்துள்ளது. சுமார் 1679 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,530-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் பதிவிட்ட டுவிட் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பதிவிட்டிருப்பதாவது,
"தருமபுரியில் இருக்கும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களிடம் கொரோனா நிலவரம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன். மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனைகளில் உள்ள 1000 படுக்கைகள் நிரம்பிவிட்டது. உயிரிழப்புகளும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 450 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டும் இருந்த நிலையில், அவையும் நிரம்பிவிட்டன. தற்போது இங்கு 1000 படுக்கை வசதிகள் தேவைப்படுகின்றது.
கொரோனா முன்களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் தட்டுப்பாட்டில் உள்ளனர். தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதால், அவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். தருமபுரியில் கொரோனாவை கட்டுப்படுத்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விட வேண்டும். மிகத்தீவிரமான முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான ஒத்துழைப்பையும் தரவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout