12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 23 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
அதேபோல் கனமழை காரணமாக கடந்த சில இன்று 23 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு மாவட்டங்கள் பின்வருமாறு: தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திண்டுக்கல், மயிலாடுதுறை மற்றும் திருவண்ணாமலை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout