சென்னைக்கு ரெட் அலர்ட்… செம்பரபாக்கம், புழல் ஏரிகளில் கூடுதல் நீர் திறப்பு!

சென்னையில் மிககனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையை ஒட்டியுள்ள செம்பரபாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் கூடுதல் அளவில் திறக்கப்பட்டு வருகிறது.

வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வுநிலைக்குப் பின்பு கடந்த 7 ஆத் தேதி முதல் செம்பரபாக்கம் ஏரியில் குறைந்த அளவே உபரி நீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் தற்போது சென்னைக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரபாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 7 ஆம் தேதி முதல் வினாடிக்கு வினாடிக்கு 250 கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் நேற்று 1,000 கனஅடியாக உயர்த்தப்பட்டது. தற்போது ரெட் அலர்டை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை முதல் வினாடிக்கு 1,500 ஆக உயர்த்தப்பட்டு தற்போது வினாடிக்கு 2,000 அடியாக திறந்துவிடப்படுகிறது. அதேபோல புழல் ஏரியில் நேற்று 1,500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் இன்று 2,000 அடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18 ஆம் தேதி தெற்கு ஆந்திரா- வட தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.