இதனால் தான் கனியை விட்டு பிரிந்தாரா ? சமீபத்தில் ரசிகனின் ரசிகன் மணி கூறிய பல தகவல்கள்.
Send us your feedback to audioarticles@vaarta.com
டிக் டாக், யூடியூப்,இண்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் தம்பதியாக வீடியோ வெளியிட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று பிறகு இருவரும் பிரிந்து வைரலாகிய ஆர்ஆர் மணி அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்
யார் இந்த ஆர்ஆர் மணி ? இவர் ரசிகனின் ரசிகன் எனும் யூடியூப் சேனல் வைத்துள்ளார்.இவர் செல்லும் இடமெல்லாம் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என இவ்வளவு ரசிகர் பட்டாளம் எப்படி வந்தது ? மணி மற்றும் கனி இருவரும் டிக் டாக் வீடியோ செய்யும்போதிலிருந்தே இவர்களுக்கென தனி ரசிகர்கள் இருந்தனர்.சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டனர்.
நான் இருக்கின்ற எல்லா சமூக வலைத்தளங்களிலும் கனியை பிளாக் செய்து விட்டேன்.ஆனாலும் அவர்களை பற்றிய எல்லா செய்தியும் எனக்கு வந்து கொண்டே இருக்கிறது.என்னுடைய பாலோவர்ஸ் எல்லோரும் என்னிடம் வந்து கேட்பார்கள் பேசுவார்கள் பிறகு அவர்களே நீங்கள் செய்வது தான் சரி என கூறி விடுவார்கள்.கனி இருந்த இடத்திற்கு யாரையும் கொண்டு வர மாட்டேன்.அதே சமயத்தில் அவர்களோடும் சேர்ந்து வாழ மாட்டேன்.
மேலும் காதல் மற்றும் திருமணம் இதை பற்றிய பேச்சே நான் எடுப்பதில்லை .விரும்புவதும் இல்லை.நான் இப்போது எந்த முடிவும் எடுப்பதில்லை .நிறைய விஷயத்தில் பாடம் கற்று கொண்டேன்.இதற்கு மேல் என்னால் முடியவில்லை.சோஷியல் மீடியா வாழ்க்கையை பொறுத்தவரை இரண்டாவது , மூன்றாவதாக கல்யாணம் ,லிவிங் டுகெதர் இதெல்லாமே சர்வ சாதாரணமாக ஆகி விட்டது.
ஆனால் எனக்கு இதில் துளி கூட உடன்பாடில்லை.நான் என் வாழ்க்கையை எனக்கு பிடித்தது போல் அமைத்து கொள்ள ஆயிரம் வழிகள் மற்றும் காரணங்கள் உள்ளன.எதுவும் வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறேன்.நான் ஏதாவது தவறு செய்தால் என் அம்மாவின் வளர்ப்பை பற்றி தவறாகப் பேசுவார்கள்.அவர்களுக்கு எந்த ஒரு கெட்டப் பெயரையும் உருவாக்கி விடக்கூடாது என்ற மனநிலையில் இருக்கிறேன்.
அதே போல் எனக்கு எதிரான சதிகள் பல நடந்து இருக்கின்றன.அதில் இருந்து மீண்டு வர நிறைய கஷ்டப் பட்டுள்ளேன்.அதுமட்டுமில்லாமல் இரண்டு பேரும் சேர்ந்து தான் இருக்கிறீர்கள் நான் பார்த்தேன் என்னிடம் ஆதாரம் உள்ளது என்றெல்லாம் பேசுவார்கள்.அது எதுவுமே உண்மை இல்லை.
வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம் தான் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது.நான் பட்ட அவமானம் என்னுடைய ரசிகனுக்கு ஏற்படக் கூடாது.நான் சிறுவயதாக இருக்கும்போதே என் அப்பா தவறி விட்டார்.அப்போது உள்ள காலக்கட்டத்தில் கணவர் இல்லையென்றால் விதவைகளை ஒதுக்கி வைக்கும் அவலம் இருந்தது.
ஊரால் ஊர் மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட என் குடும்பத்தை எல்லோரும் பார்க்கும்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே பெரிய இலக்காக இருந்தது என மணி அவர்கள் மனம் கலங்கி கூறிய தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com