பயிற்கடன் தள்ளுப்படிக்கான ரசீது 10-15 நாட்களில் வழங்கப்படும்- தமிழக முதல்வர் விளக்கம்!
- IndiaGlitz, [Tuesday,February 09 2021]
விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு விவசாயச் சங்கங்கள் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பயிற்கடன் தள்ளுபடிக்கான அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டது.
இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம் கைனூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய தமிழக முதல்வர் இன்னும் 10-15 நாட்களில் பயிற்கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் பயிற்கடன் தள்ளுபடிக்கான நடைமுறைகள் தமிழகத்தில் மிக விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது.
கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, பேரிடர் பாதிப்பு எனப் பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு இப்பயிற்கடன் தள்ளுபடி பெரும் உதவியாக இருக்கிறது. மேலும் இந்த செயல்திட்டம் கூட்டுறவு அமைப்புகளுடன் விவசாயிகள் தொடர்ந்து தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு மானியம், பயிர்க்கடன் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு உதவியாக அமையும் எனவும் அரசு சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.