விஜய் படத்தில் சன்னிலியோன் நடிக்காதது ஏன்?

  • IndiaGlitz, [Wednesday,October 19 2016]

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய நிலையில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தில் ஒரு ஐட்டம் நடனம் ஆட சன்னிலியோனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த படத்தில் நடனம் ஆட சன்னிலியோன் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை படக்குழுவினர் தர ஒப்புக்கொண்டதாலும், இந்த பாடலின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மும்பையில் இருந்து சென்னை வரும் தனது டீமுக்கான விமான செலவு உள்பட மற்ற செலவுகளையும் தயாரிப்பாளர் ஏற்கவேண்டும் என்ற நிபந்தனையை சன்னிலியோன் விதித்ததாகவும், இதற்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளாததால் சன்னிலியோன் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சன்னிலியோன் டீமில் சுமார் 10 பேர் வரை இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷாலுடன் இணைந்த விஜய் ஆண்டனி

விஷால், தமன்னா, நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' திரைப்படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு 'த்ரிஷ்யம்' ஆகிறது மோகன்லாலின் 'புலிமுருகன்'

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த 'புலிமுருகன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

விஜய் இடத்தை பிடித்த விஷால்-கார்த்தி

பாலிவுட்டில் இருந்து மீண்டும் கோலிவுட்டுக்கு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திரும்பிய பிரபுதேவா, மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மீண்டும் விக்னேஷ் சிவனுடன் இணைந்த நயன்தாரா

'நானும் ரெளடிதான்' படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மீண்டும் விஜய்-அட்லி மேஜிக். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்துவரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் அட்லியின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.