6 விக்கெட்டுக்கள் எடுத்த சஹலை தோனி திட்டியது ஏன்?
- IndiaGlitz, [Thursday,February 02 2017]
இந்தியா, மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்று மும்பையில் மோதிய 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா கொடுத்த 203 ரன்கள் என்ற இலக்கை மிக எளிதாக இங்கிலாந்து எட்டிவிடும் என்றுதான் முதல் பத்து ஓவர்களை பார்த்தவர்கள் ஊகித்திருப்பார்கள். ஆனால் இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் சஹல், அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதனால் ஆட்டநாயகன் விருது மட்டுமின்றி தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்றார்.
இந்நிலையில் ஆறு விக்கெட்டுக்கள் எடுத்த சஹலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் முன்னாள் கேப்டன் தோனி அவரை திட்டினார் என்றால் நம்ப முடிகிறது. ஆனால் இது நடந்தது உண்மைதான்.
ஆட்டத்தின் இரண்டாவது ஒவரின் 3வது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் பில்லிங்ஸை அவுட் ஆக்கிய சஹல், அதற்கு அடுத்த பந்திலேயே இன்னொரு விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை மிஸ் செய்தார். அதாவது சஹல் வீசிய பந்தை ஜோ ருட் அடித்துவிட்டு ஒரு ரன் எடுக்க முயற்சி செய்தார். ஆனால் கேப்டன் கோஹ்லி அபாரமாக டைவ் செய்து அந்த பந்தை தடுத்ததால் ரன் எடுக்கும் முயற்சியை கைவிட்டு திரும்பிவிட்டார். அந்த நேரத்தில் பந்து சஹலிடம் இருந்தது. அவர் நினைத்திருந்தால் இன்னொரு முனையில் விக்கெட்டை அடித்து ரன்னரான ஜேசன் ராயை அவுட் ஆக்கியிருக்கலாம். ஆனால் பதட்டத்தில் சஹல் பந்தை தோனியை நோக்கி எறிந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தோனி, அங்கு அடித்திருக்க வேண்டியதானே.. என்று திட்டினார்.
தோனியிடம் திட்டு வாங்கினாலும் அதன்பின்னர் சோர்ந்து போகாமல் நம்பிக்கையுடன் அவர் பந்து வீசி ஆறு விக்கெட்டை வீழ்த்தினார். போட்டி முடிந்தவுடன் சஹலை திட்டிய அதே தோனி வாழ்த்தும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.