'வாழும் கலை' ஸ்ரீரவிசங்கர் கமல்ஹாசனை சந்தித்தது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரத பிரதமர் நரேந்திரமோடியின் கனவு திட்டங்களில் ஒன்று 'தூய்மை இந்தியா' திட்டம். இந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தன்று தொடங்கி இந்த திட்டத்திற்காக 100 பிரபலங்களை தூதுவராக நியமனம் செய்தார். அவர்களில் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் தமிழக தூதுவராக நியமனம் செய்யப்பட்டவர்தான் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் 'வாழும் கலை' ஸ்ரீரவிசங்கர் அவர்களை கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, 'நடிகர் கமல்ஹாசன் நற்பணி இயக்கங்கள் மூலம் பல ஆண்டுகளாக சமுக சேவைகள் செய்தது வருபவர் என்றும், ஒரு தமிழரை தமிழ்நாட்டின் தூதுவராக 'தூய்மை இந்தியா' திட்டத்திற்கு நியமத்தது சிறப்புகுறிய செயலாகும் என்று கூறி கமல்ஹாசனை ஸ்ரீரவிசங்கர் வாழ்த்தினார்.'தூய்மை இந்தியா' திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு முடிவடையவுள்ள நிலையில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கவே அவரை மரியாதை நிமித்தமாக ஸ்ரீரவிசங்கர் சந்திக்க விரும்பியதாகவும் அதன் காரணமாகவே இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் 100 தூதுவர்களும் சமீபத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்தனர். இவர்களில் கமல்ஹாசன், சச்சின் தெண்டுல்கர், நடிகை அமலா, நடிகை தமன்னா, ஆகியோர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments