'ரெமோ'ன்னும் ஏன் பேர் வச்சாங்க தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,March 05 2016]

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்திற்கு 'ரெமோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். விக்ரம் நடித்த 'அந்நியன்' படத்தில் வரும் ரொமான்ஸ் கேரக்டரை மையப்படுத்தியே இந்த டைட்டில் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த டைட்டிலுக்கான உண்மையான காரணம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.


இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருவதாகவும் ஒன்றில் அவரது கேரக்டர் பெயர் Re என்ற ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பிப்பதாகவும், நர்ஸ் வேடத்தில் அவர் நடித்த இன்னொரு கேரக்டரின் பெயர் Mo என்ற ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பிப்பதாகவும் இவை இரண்டையும் இணைத்து 'ரெமோ' என்ற டைட்டிலை இந்த படத்திற்கு வைத்துள்ளதாகவும் புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், அனிருத் இசையமைத்தும் வருகிறார். ஹாலிவுட் மேக்கப்மேன் சீன்ஃபுட், சிவகார்த்திகேயனுக்கு மேக்கப் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கபாலி'யில் உள்ள 10 முக்கிய அம்சங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி முடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

மாயாவுடன் நடுத்தெருவில் சண்டை போட்ட ஆரி

மாயா' படத்தில் நயன்தாராவுடன் ஜோடியாக நடித்த ஆரி, தற்போது 'உன்னோடு கா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்...

மொட்ட சிவா கெட்டசிவா பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

கடந்த ஆண்டு 'காஞ்சனா 2' என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த ராகவா லாரன்ஸ் தற்போது 'பைரவா', மொட்டசிவா கெட்டசிவா மற்றும் 'முனி 3 நாகா'...

சூர்யாவின் 24 டீஸரைப் புகழ்ந்து தள்ளிய தமிழ் ஹீரோ

கோலிவுட், பாலிவுட்டில் தனது தனி முத்திரையை பதித்த நடிகர் தனுஷ் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...

பாட்ஷாவையும் தெறியையும் ஒரே நேரத்தில் முடித்த ஜி.வி.பிரகாஷ்

இளம் இசையமைப்பாளராகவும், முன்னணி ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் தெறி'...