'ரெமோ'ன்னும் ஏன் பேர் வச்சாங்க தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்திற்கு 'ரெமோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். விக்ரம் நடித்த 'அந்நியன்' படத்தில் வரும் ரொமான்ஸ் கேரக்டரை மையப்படுத்தியே இந்த டைட்டில் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த டைட்டிலுக்கான உண்மையான காரணம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருவதாகவும் ஒன்றில் அவரது கேரக்டர் பெயர் Re என்ற ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பிப்பதாகவும், நர்ஸ் வேடத்தில் அவர் நடித்த இன்னொரு கேரக்டரின் பெயர் Mo என்ற ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பிப்பதாகவும் இவை இரண்டையும் இணைத்து 'ரெமோ' என்ற டைட்டிலை இந்த படத்திற்கு வைத்துள்ளதாகவும் புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், அனிருத் இசையமைத்தும் வருகிறார். ஹாலிவுட் மேக்கப்மேன் சீன்ஃபுட், சிவகார்த்திகேயனுக்கு மேக்கப் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout