10 முதல் 13 ஆயிரம் ரூபாய்.. இந்தியாவில் இன்று வெளியாகிறது ரியல்மீ 5i.
- IndiaGlitz, [Thursday,January 09 2020]
Realme 5i இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை வியட்நாமிய விலைக் குறிக்கு இணையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த வார தொடக்கத்தில் தெற்காசிய நாட்டில் VND 3,690,000 விலையில் தொடங்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,500 ஆகும். அடிப்படை வேரியண்டில் 3GB RAM மற்றும் 32GB இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது. சீன நிறுவனம் 4GB RAM மற்றும் 64GB இன்பில்ட் ஸ்டோரேஜுடன் ஒரு வேரியண்டை அறிமுகப்படுத்தியது. இதன் விலை VND 4,290,000 ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 13,500 ஆகும்.
டூயல்-சிம் Realme 5i, ColorOS 6.0.1 உடன் Android Pie-ல் இயங்குகிறது. இது dewdrop-shaped display notch, 1200:1 contrast ratio மற்றும் Corning Gorilla Glass 3+ for protection உடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. புதிய ரியல்மி போனானது 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.
Realme 5i, 10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும். இது 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகிறது. இதனை microSD card வழியாக (256GB வரை) விரிவுபடுத்தலாம். இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Bluetooth 5.0, Wi-Fi 802.11ac மற்றும் GPS ஆகியவை அடங்கும்.