கென்னடி கிளப்: கிளைமாக்ஸ் காட்சிக்காக நிஜ கபடி போட்டி நடத்திய படக்குழு

  • IndiaGlitz, [Tuesday,March 12 2019]

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா நடித்து வரும் 'கென்னடி கிளப்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ரூ.2 கோடி செலவில் நிஜ கபடி போட்டி தொடர் ஒன்றை படக்குழு நடத்திய தகவல் தற்போது வெளிவந்தூள்ளது

சுசீந்திரன், சசிகுமார் முதல்முறையாக இணைந்துள்ள 'கென்னடி கிளப்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விழுப்புரத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்காக இந்தியாவில் இருந்து 16 பெண் கபடிக்குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களிலிருந்து வந்துள்ள நிஜ வீராங்கனைகளை கொண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது இந்த படப்பிடிப்பில் ஏறத்தாழ 300 வீராங்கனைகள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.

படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ போட்டியாகவே நடத்தி படப்பிடிப்பை பதிவு செய்து வருகிறார்கள் பட குழுவினர். இறுதிப்போட்டியை காண ஏராளமானோரை வரவழைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட காட்சிகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடந்துகிறார்கள். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்கள் மட்டும் படமாக்கப்படுகிறது என்று இதன் தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்தார்.

More News

பொள்ளாச்சி விவகாரம்: 4 வீடியோக்கள் மட்டும் கிடைத்ததாக காவல்துறை தகவல்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தமிழகம் முழுவதும் கொளுந்துவிட்டு எரியும் நிலையில் இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் யாரும் இல்லை என்றும்,

பொதுமக்களிடம் சிக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள்; அதிர்ச்சி வீடியோ

பொள்ளாச்சியில் பல நூறு அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியதோடு அவர்களை ஆபாச படம் எடுத்த குற்றவாளிகள் பிடிபட்டும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை

நம்ம ஓடணுமா? ஒட விடணுமா? 'சிந்துபாத்' டீசர் விமர்சனம்

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கிய 'சிந்துபாத் திரைப்படத்தின் ஒரு நிமிட டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

துருவ் விக்ரமின் 'புதிய வர்மா'வில் 'கோலமாவு கோகிலா' நடிகர்

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த 'வர்மா' படத்தை வெளியிட போவதில்லை என தயாரிப்பு நிர்வாகம் முடிவு செய்து அதற்கு பதிலாக புதிய வர்மாவாக 'ஆதித்ய வர்மா' என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது

'தல' இருந்திருந்தால் ஜெயித்திருக்கலாம்: விக்னேஷ் சிவன்

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்திருந்தும்