நிஜமாவே வேற்று கிரகவாசிகள் மனிதர்களிடம் பேச ரெடியாதா இருக்காங்க... திடுக்கிட வைக்கும் புது ஆய்வு!!!

  • IndiaGlitz, [Thursday,June 18 2020]

 

பூமியை போல வேறு கிரகங்களிலும் மனிதர்கள் இருப்பார்களா? ஒருவேளை இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? மனிதர்களைப் போலவே உடலமைப்பு கொண்டிருப்பார்களா? என்பது போன்ற பல சந்தேகங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இதைத்தவிர சிலர் பறக்கும் தட்டுக்களைப் பார்த்ததாகவும் தகவல்களை வெளியிட்டு உள்ளனர். சில நேரங்களில் பூமியில் அவர்கள் வந்து சென்றதால்தான் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டதாகவும் செய்திகள் கூட வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவல்கள் எல்லாவற்றையும் உண்மையாக்கும் வகையில் தற்போது ஒரு புதிய ஆய்வு வெளியாகி இருக்கிறது. அந்த ஆய்வில் வேற்று கிரகங்களைச் சார்ந்த 36 நாகரிக இனத்தைச் சார்ந்த மனிதர்கள் பூமியைத் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.

விண்மீன்களைப் பற்றியும், கிரகங்களைப் பற்றியும் அங்குள்ள வளங்களைப் பற்றியும் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏதுவான அமைப்பு இருக்கிறதா? ஒருவேளை உண்மையிலேயே மனிதர்கள் வாழ்கிறார்களா என்ற நோக்கத்திலும் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. முன்னதாக 1961 ஆம் ஆண்டு வானியல் அறிஞரான பிராங் டிரோக் விண்மீன் கூட்டங்களை ஆராய்வதற்கு ஒரு சமன்பாட்டை வகுத்து இருந்தார். அது டிரோக் சமன்பாடு என அழைக்கப்பட்டது. அந்தச் சமன்பாட்டை தற்போது நாட்டிங் ஹாங் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் புதுப்பித்து உள்ளனர்.

ஆஸ்ட்ரோபயலாஜிக்கல் கோப்பர் நிக்கான் எனப் பெயர்க்கொண்ட அந்தப் புதிய கோட்பாட்டின் படி ஆய்வு செய்து விஞ்ஞானிகள் தற்போது சில தகவல்களை வெளியிட்டு உள்ளனர். வேற்று கிரகங்களில் 36 நாகரிக இனத்தைச் சார்ந்த தகவல் தொடர்பில் வளர்ந்த சமூகங்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் நம்முடைய பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் எனவும் கூறிப்பிட்டு உள்ளனர். இந்தத் தகவலைக் கேட்டு உண்மையிலே ஒரு பிரமிப்பு ஏற்படத்ததான் செய்கிறது. காரணம் இவ்வளவு நாள் வேற்று கிரகங்களில் மனிதர்கள் இருப்பார்களா? எப்படி இருப்பார்கள்? என்ன சாப்பிடுவார்கள்? உடலமைப்பு நம்மைப் போலவே இருக்குமா?? ஒருவேளை முன்னமே பூமிக்கு வந்திருக்கிறார்களா? இனிமேல்தான் பூமிக்கு வரப்போகிறார்களா? என்ன மொழி பேசுவார்கள்? இப்படி ஓராயிரம் கேள்வி இருந்து வந்தது.

இத்தனை கேள்விகளையும் உண்மையாக்கும் விதத்தில் உண்மையிலேயே வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்கள். அதிலும் உயர் தொழில்நுட்பம் கொண்ட இனத்தைச் சார்ந்தவர்கள் பூமியை தொடர்பு கொள்ள நினைக்கிறார்கள் என்பது போன்ற பிரமிப்பான தகவல்களை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இப்படி ஒரு இனம் உயர் தொழில் நுட்பத்தில் தானாக வளர்ந்து மற்ற கிரகங்களைத் தொடர்பு கொள்வதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதையும் இந்த ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர். 17,000 ஒளி ஆண்டு காலத்தில் நாகரிக சமூகம் தானாக பரிணாம வளர்ச்சி அடைந்து முன்னேற்றம் அடைந்துவிடும் எனவும் தகவல் வெளியிடப் பட்டு இருக்கிறது. மேலும் தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய வானியல் கோட்பாட்டை வைத்து விண்மீன்களின் வயது, உலோகம் பற்றிய விவரங்கள் போன்றவற்றை எளிதாக கணித்து விட முடியும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் ஆய்வுக்குழுவின் தலைவர் கிறிஸ்டோன் கான்செலிஸ் இயல்பாகவே பல பில்லியன் வருடங்களாக வளர்ச்சி அடைந்து வரும் இன மக்கள் தற்போது பூமியுடன் தொடர்பு கொள்ள நினைக்கிறார்கள். பொதுவாக நட்சத்திரத்தின் தூரம், வெப்பநிலை போன்ற காரணிகளால் அது தொடர்ந்து தடை பெற்று வருகிறது. இம்முயற்சி என்றைக்காவது வெற்றியடையும் என எதிர்ப்பார்க்கலாம் எனவும் குறிப்பிட்டு உள்ளனார். ஒருவேளை ஏற்கனவே அவர்கள் நம்மைத் தொடர்பு கொள்ளவும் செய்திருக்கலாம். அத்தகவல்களை நாம் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது என மேலும் அதிர்ச்சியான தகவல்களை கூறியிருக்கிறார்.

More News

வெஸ்டன் கழிப்பறையை பயன்படுத்தினால் கொரோனா வருமா??? பீதியைக் கிளப்பும் புதுத்தகவல்!!!

சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான ஒரு புதிய ஆய்வு முடிவு வெளியிடப் பட்டு இருக்கிறது.

ஜார்ஜ் ஃபிளாட் மகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்ட பிரபல நடிகையின் கணவர்

சமீபத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாட் என்பவர் அமெரிக்க போலீஸ் அதிகாரி ஒருவரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம்

கக்கன் - சிவாஜி கணேசன் குறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்த இயக்குனர் சேரன்

முன்னாள் அமைச்சர் கக்கன் என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது எளிமை தான். எளிமையின் வடிவமாக இருந்த கக்கன் அவர்களின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுவரவு மகனுடன் பிறந்தநாளை கொண்டாடும் அஜீத்-விஜய் பட இயக்குனர்

அஜித் நடித்த 'கிரீடம்', விஜய் நடித்த 'தலைவா' உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். இவர் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக 'தலைவி'

1967 இல் சீனப்பகுதிக்கே சென்று தாக்கிய இந்திய இராணுவம்- 300  சீனர்கள் உயிரிழப்பு & பரபரப்பு சம்பவங்கள்!!!

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட வில்லை என்ற தகவல் சில தினங்களாக திரும்பத் திரும்ப கூறப்படுவதைப் பார்க்க முடிகிறது