ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்று 100 வயது
- IndiaGlitz, [Thursday,November 30 2017]
தற்போது ஒரு ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை என்றாலும் இன்றுடன் அந்த நோட்டுக்கு வயது சரியாக 100 ஆகிறது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலகட்டத்தில் கடந்த 1917ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இங்கிலாந்து நாட்டு அச்சகத்தில் முதன்முதலாக ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவரை இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயம் வெள்ளி உலோகத்தில் தான் இருந்தது.
1917ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் நடந்ததால் ஆயுதங்கள் தயாரிக்க அதிக வெள்ளி தேவைப்பட்டதால் ஆங்கிலேயர்கள் ஒரு ரூபாய் நாணயத்திற்கு மாற்றாக ரூபாய் நோட்டை அச்சடித்தனர். அந்த வருடத்தில் ஒரு ரூபாய்க்கு 10.7 கிராம் வெள்ளி வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.