'தலைவர் நிரந்தரம்'.. ஹெலிகாப்டர் முன் ரஜினியுடன் புகைப்படம் எடுத்து கொண்ட பிரபல இயக்குனர்..!

  • IndiaGlitz, [Thursday,May 09 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஹெலிகாப்டர் முன் பிரபல இயக்குனர் ஒருவர் எடுத்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

மலையாள திரையுலகில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஆர்டிஎக்ஸ்’ ’ராபர்ட் டோனி சேவியர்’ என்ற டைட்டிலில் வெளியான இந்த படம் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 84 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தின் பின்னணியில் ஹெலிகாப்டர் இருக்கும் நிலையில் இந்த படம் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்தது என்று கூறப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஒரு புகைப்படத்தில் அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவில் அவர் ’உங்கள் கனவுகளை ஒருநாள் பிரபஞ்சம் நிறைவேறும் தருணம்’ என்று கூறி ’தலைவர் நிரந்தரம்’ என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ’ஆர்டிஎக்ஸ்’ படத்தில் நடித்த நடிகர் ஆண்டனி வர்கீஸ் உள்பட ஏராளமானோர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More News

படம் பார்த்தவர்கள் தயவுசெய்து இதை மூன்றையும் சொல்லாதீங்க: 'ஸ்டார்' இயக்குனர் வேண்டுகோள்..!

கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் இளன்

அவன் அடிச்சா அடி விழாது, இடி விழும்.. விஜய் நண்பரின் ஆவேச பதிவு..!

தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் அவருடைய பல திரைப்படங்களில் நடித்தவருமான நடிகர் தனது சமூக வலைதளத்தில் 'அவன் அடிச்சா அடி விழாது,  இடி விழும்' என்று 'கோட்' படம்

சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை தொடங்கிய தனுஷ் பட நடிகை.. இப்படியும் ஒரு வழி இருக்கா?

நடிகர் நடிகைகளின் பெயர்களில் தான் பல போலி கணக்குகள் தொடங்கப்படும் என்று கூறப்படும் நிலையில் தனுஷ் படத்தில் நடித்த நடிகை போலி கணக்குகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முடிவுக்கு வந்தது லேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம்.. கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து அவர் படக்குழுவினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்  வெளியிட்ட 'தலைமை செயலகம்' சீரிஸ் டிரைலர்.. ஜீ தமிழில் ரிலீஸ் எப்போது?

தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் மே 17ஆம் தேதி