'அருவி' இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,May 29 2018]

அதிதி பாலன் நடிப்பில் இயக்குனர் அருண்பிரபு இயக்கிய 'அருவி' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் நடித்த அதிதிபாலனுக்கும் இயக்குனர் அருண்பிரபுவுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட கோலிவுட் திரையலகினர் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்

இந்த நிலையில் இயக்குனர் அருண்பிரபுவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் படங்களின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா தனது 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று குமுளி அருகே நடைபெற்றது.

தங்களது திரைப்படம் மூலம் நல்ல கருத்துக்களை கூறி வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திலும் ஒரு சமூக அக்கறையுள்ள விஷயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.