ஷங்கருடன் ஒரு அற்புத பயணம்: 'ஆர்சி 15' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் ஷங்கருடன் ஒரு அற்புத பயணம் என ராம் சரண் தேஜாவின் 15வது படத்தில் பணிபுரியும் பிரபலம் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவின் 15வது படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய பாடலை கம்போஸ் செய்யும் பணி தொடங்கி விட்டதாகவும் தமன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். மேலும் ஷங்கருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
ராம்சரண் தேஜாவின் 15வது படத்தின் பாடல் கம்போஸிங் பணி தொடங்கி விட்டது என்றும் மிகச்சிறந்த மேதையான ஷங்கர் அவர்களுடன் இணைந்து செய்யும் இந்த அற்புத பயணம் மிகவும் அற்புதமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான தமன், தற்போது அவருடைய படத்திற்கே இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#RC15 Compositions With this Super Brilliant Human @shankarshanmugh Sir?? .. amazing journey so far with our dear @AlwaysRamCharan gaaru ??♥️ @SVC_official ?? pic.twitter.com/g1WGZU2Hrb
— thaman S (@MusicThaman) June 24, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments