சேமிப்பு கணக்கில் இருந்தும் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு. ஆர்பிஐ உத்தரவு
- IndiaGlitz, [Wednesday,February 08 2017]
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் வங்கியின் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பிப்ரவரி 1 முதல் நடப்பு கணக்கு, சிசி கணக்கு, ஓவர் டிராப்ட் கணக்கு ஆகியவற்றில் இருந்து பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை என்றும் அதேபோல் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கவும் இனி கட்டுப்பாடு இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்தது.
இந்நிலையில் தற்போது சேமிப்பு கணக்கில் இருந்தும் பணம் எடுக்க தட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்தி உள்ளது. பிப்ரவரி 20ம் தேதி முதல் சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ 50,000 எடுக்கலாம் என்றும் மார்ச் 13 முதல் இந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.