செல்லாத நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்ய புதிய நிபந்தனைகள்

  • IndiaGlitz, [Monday,December 19 2016]


ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு அவற்றை டிசம்பர் 30க்குள் வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம் என்று அறிவித்தது. இப்போது செல்லாத நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளும் நடைமுறை நிறுத்தப்பட்டு அந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தற்போது செல்லாத நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்யவும் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 500, 1000 நோட்டுக்களாக ரூ. 5000த்துக்கு மேற்பட்ட தொகையை ஒருமுறை மட்டுமே ஒருவர் தன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தொகை முன்பே செய்யாமல் இப்போது ஏன் டெபாசிட் செய்யப்படுகிறது என்று டெபாசிட் செய்பவர் வங்கி அதிகாரிகள் இருவர் முன்னிலையில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த விளக்கம் நியாயமானதாக இருந்தால் மட்டுமே வங்கிகள் டெபாசிட் தொகையை ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரூ.5000க்கு மேற்பட்ட தொகையை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்படும் விளக்கம் பின்னாளில் தணிக்கைக்கு (Audit) உட்படுத்தப்படும் வகையில் முறையாகப் பதிவு செய்துவைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வங்கிக் கணக்கில் 5000க்கு குறைவான தொகையை எத்தனை முறை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் ஆனால் பல முறை டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ.5000ஐத் தாண்டும்போது அதற்கு மேல் எந்தத் தொகையும் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படக் கூடாது.

இந்த நிபந்தனைகள், அதிக தொகைகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்பவர்கள் தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளில் செய்வதைத் தடுத்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள பிரதான் மந்த்ரி கரீப் கல்யாண் யோஜனா, 2016 என்ற புதிய வரிவிதிப்புத் திட்டத்தில் செலுத்தவைப்பதற்குத்தான் என்றும் இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்பவர்களுக்கு மேலே சொன்ன எந்த நிபந்தைனையும் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

உங்க அம்மாவைப் பார்த்து இந்த கேள்வியைக் கேளுடா . குஷ்பு கொந்தளித்தது ஏன்?

சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு சுறுசுறுப்புடன் இருக்கும் செலிபிரிட்டிகளில் ஒருவர் குஷ்பு. அரசியல், சினிமா, சமூக பிரச்சனை என அவர் போடும் பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதுண்டு.

'பைரவா' ட்ராக் லிஸ்ட்

'Bairavaa' Track List

ஜெயலலிதா சிகிச்சை விபரங்களை வெளியிட மத்திய, மாநில அரசு உத்தரவா? சசிகலா தரப்பு அதிர்ச்சி

தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பொதுமக்களும்...

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தில் வடிவேலு

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 61வது படமான 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'மன்னன்' ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்?

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து...