எளிமை ஆக்குமா ஆர்பிஐ வெளியிடும் 200 ரூபாய் நோட்டு
- IndiaGlitz, [Thursday,June 29 2017]
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பின்னர் பொதுமக்களின் பழக்கத்திற்காக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியானது.
புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் வெளியானபோதிலும் சில்லறை தட்டுப்பாடு உள்பட பல பிரச்சனைகள் நீடித்து வருவதாகவும், இதனை தவிர்க்க ரூ.200 நோட்டுகள் அச்சடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு ரூ.200 நோட்டு அச்சாகி புழக்கத்திற்கு வந்த பின்னர் இந்த பிரச்சனைகள் தீர வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்பட்டது.
ரூ.200 நோட்டு அச்சடிக்க ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை குழு ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசும் ஒப்புதல் அளித்தள்ளதால் விரைவில் புதிய ரூ.200 நோட்டுகளை அச்சடிக்கும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதியதாக அச்சடிக்கப்பட உள்ள ரூ.200 நோட்டு அதிக பாதுகாப்பு தன்மைகளுடன் அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.