சிசிடிவி பதிவுகளை ஒப்படையுங்கள். வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு
- IndiaGlitz, [Wednesday,December 14 2016]
கடந்த நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பின்னர் கள்ள நோட்டு, மற்றும் கருப்புப்பண முதலைகள் பல்வேறு வழிகளில் தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்ற முயன்றுள்ளனர்.
இதற்கு வங்கி அதிகாரிகள் பலர் உடந்தையாக இருந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் நேற்று பெங்களூரை சேர்ந்த ஆர்பிஐ அதிகாரி ஒர்வர் ரூ.1.5 கோடி பழைய கரன்சிகளை மாற்ற முயற்சித்தபோது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் வங்கி உயரதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் நவம்பர் 8 முதல் 30 தேதி வரையிலான சிசிடிவி பதிவுகளை வங்கிகள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஆர்பிஐ அதிகாரிகள் கேட்கும்போது ஒப்படைக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதனால் பழைய கரன்சிகளை முறைகேடாக மாற்றிய வங்கி அதிகாரிகள் இன்னும் பிடிபட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.