வங்கிக்கணக்கு-ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை. ஆர்பிஐ

  • IndiaGlitz, [Monday,January 30 2017]

கடந்த நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு எடுத்த முடிவை அடுத்து, வங்கிக்கணக்கில் இருந்தும் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. முதலில் ரூ.2000வரை மட்டுமே ஏடிஎம்களில் இருந்து எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 1 முதல் ரூ.10000 வரை எடுக்க அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடப்பு கணக்கில் இருந்து தினமும் ரூ.1 லட்சம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் இந்த உச்சவரம்பு கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 1 முதல் நடப்பு கணக்கு, சிசி கணக்கு, ஓவர் டிராப்ட் கணக்கு ஆகியவற்றில் இருந்து பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை. அதேபோல் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கவும் இனி கட்டுப்பாடு இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் சேமிப்பு கணக்கில் வைத்துள்ளவர்களுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சேமிப்பு கணக்கில் இருந்தும் பணம் எடுக்க உச்சவரம்பை தளர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

More News

எனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன். பிரபல நடிகையின் ஓப்பன் டாக்

பிரபல பாலிவுட் இளம் நடிகை அலியாபட், 'ஹைவே', 2 ஸ்டேட்ஸ் உள்பட பல வெற்றி படங்களில் நடித்தவர். ராசியான நடிகை என இயக்குனர்களால் முத்திரை குத்தப்பட்டவர் என்றாலும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது அலியா பட்-இன் இன்னொரு பொழுதுபோக்கு...

இரட்டிப்பு மகிழ்ச்சியில் 'மொட்டசிவா கெட்டசிவா' படக்குழு

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் பல தடைகளை கடந்து விரைவில் திரைக்கு வரவுள்ளதாக வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் குழுவினர்களுக்கு தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது...

மணிரத்னம்சுஹாசினி தம்பதியின் மகத்தான முடிவு

மக்களின் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் தொண்டு நிறுவனங்களில் ஒன்று சாகா' என்ற தொண்டு நிறுவனம். இந்நிறுவனம் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி மற்றும் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை செய்து வருகின்றது...

ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் போலீஸ் பிடிபட்டாரா? பரபரப்பு தகவல்

சென்னை மெரீனாவில் நடைபெற்ற மாணவர்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி தினத்தன்று மாணவர்களை போலிசார் கலைக்க முயன்றனர்...

முதல்வருக்கு ராகவா லாரன்ஸ் வைத்த மூன்று கோரிக்கைகள்

மாணவர்கள் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து பெரும் உதவி செய்து வந்தவர் ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே. போராட்டத்தின் கடைசி நாளன்று ஏற்பட்ட வன்முறையின்போதும் அவர் பதட்டத்தை குறைக்க மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையும் அனைவரும் அறிவோம்...