பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு?
- IndiaGlitz, [Wednesday,June 21 2017]
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும் பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள செல்லாத நோட்டுக்களை 2017 மார்ச் 30ஆம் தேதிக்குள் வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
இந்த திடீர் அறிவிப்பால் கருப்பு பண முதலாளிகள் மாட்டினார்களா? என்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை. ஆனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அரசு விதித்திருந்த மார்ச் 30ம் கடந்துவிட்டது. இருப்பினும் ஒருசில இடங்களில் பழைய நோட்டுக்கள் பிடிபட்டு கொண்டுதான் உள்ளது.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளுக்கும், அஞ்சல் நிலையங்களுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி தற்போது பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள தற்போது 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது. ஆனால் இந்த அவகாசம் பொதுமக்களுக்கு இல்லை என்பதும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.