தனுஷ் கிட்ட நிறைய திட்டு வாங்கி இருக்கேன்.. 'ராயன்' படப்பிடிப்பு குறித்து கூறிய பிரபல நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படம் அடுத்த மாதம் 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் ‘ராயன்’ படத்தில் தனுஷை தவிர உங்களுக்கு பிடித்த கேரக்டர் என்ன என்று கேட்டபோது துஷாரா விஜயன் ’என்னுடைய கேரக்டர்’ என்று கூற, அபர்ணா பாலமுரளியும் ’துஷாரா கேரக்டர் தான்’ என்று கூறினார். இதனை அடுத்து காளிதாஸ் ஜெயராமன் கூறிய போது ’சந்திப் கேரக்டர் எனக்கு பிடித்ததாக தெரிவித்தார்.
அடுத்ததாக ‘ராயன்’ செட்டில் யாரை ஈசியாக ஏமாற்றிவிடலாம், யாரை ஏமாத்த முடியாது என்ற கேள்விக்கு ’காளியை ஈசியாக ஏமாற்றி விடலாம்’ என்று அபர்ணா பாலமுரளி கூற, பதிலடியாக ’ஈசியாக ஏமாற்ற முடிந்த ஒரே ஆள் அபர்ணா பாலமுருளி’ என்று காளிதாஸ் கூறினார். ஆனால் துஷாரா விஜயன் ‘யாருமே ஏமாற மாட்டோம், எல்லாருமே செம தெளிவா இருப்பாங்க’ என்று கூறினார். மேலும் ’ஏமாத்த முடியாத ஒரே ஆள் தனுஷ் தான்’ என்று மூவரும் கூறினர்.
‘ராயன்’ செட்டில் மறக்க முடியாத தருணம் எது என்று கேட்டபோது ’முதல் சாட் நடித்த போது தனுஷ் என் தோளில் தட்டி பாராட்டினார், அது எனக்கு மறக்க முடியாது என்று காளிதாஸ் கூறினார். ’அடங்காத அசுரா’ என்ற பாடல் படப்பிடிப்பின் போது எல்லோரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கிட்டோம், அது எனக்கு மறக்க முடியாத தருணம்’ என்று துஷாரா கூறினார். ’கடைசி நாள் பிரியாணி போட்டார்கள், அதை என்னால் மறக்க முடியாது’ என்று அபர்ணா கூறினார்.
இயக்குனர் தனுஷ் கிட்ட திட்டு வாங்கி இருக்கீங்களா? என்ற கேள்விக்கு ’நிறைய தடவை வாங்கி இருக்கேன்’ என்று துஷாராவும், ’சில நேரங்களில் திட்டு வாங்கி இருக்கேன்’ என்று அபர்ணா பால முரளிவும், ’நல்லவேளை நான் இதுவரை திட்டு வாங்கவில்லை, அதற்கான இடமும் நான் கொடுக்கவில்லை’ என்று காளிதாஸ் ஜெயராமும் கூறினார்கள்.
ராயன் படத்தில் உங்களுடைய உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று கேட்டபோது அனைத்து பாடல்களும் எனக்கு பிடிக்கும் என்று அபர்ணாவும், ’அடங்காத அசுரா பாடல்’ என துஷாராவும், ’ரிலீஸ் ஆனதில் வாட்டர் பாக்கெட் பாடல் படிக்கும், ஆனால் எனக்கு பிடித்த இன்னொரு பாடல் இன்னும் வெளியாகவில்லை’ என்று காளிதாஸ் கூறினார்.
‘ராயன்’ படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்று கேட்ட கேள்விக்கு ’இது ஒரு எமோஷனல் படம், ஒரு தனுஷ் படத்தில் நீங்கள் என்ன எதிர்பார்த்து வந்தீர்களோ அது கண்டிப்பாக கிடைக்கும் என்று மூவரும் கூறினர். சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Here we go, meet our #Raayan family 😊🫶🏾#Raayan in cinemas from July 26 💥@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan @omdop @editor_prasanna @PeterHeinOffl @jacki_art… pic.twitter.com/zFiQXItVlS
— Sun Pictures (@sunpictures) June 28, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com