close
Choose your channels

புஷ்பா ஸ்டைலில் விக்கெட்டை கொண்டாடிய ஜடேஜா… ஃபயரான வைரல் புகைப்படம்!

Saturday, February 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா தற்போது இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவருடைய ரீஎண்ட்ரி எப்படியிருக்கும் என ரசிகர்கள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்தனர். அதுவும் சிஎஸ்கே ரசிகர்களிடம் இவரைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தே காணப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜடேஜா அதிரடிகாட்டி விளையாடியதுடன் ஒரு சுவாரசியமான விஷயத்தையும் செய்திருக்கிறார்.

இலங்கைக்கு எதிராக இந்திய அணி தனது சொந்த மண்ணில் 3 டி20 போட்டிக்கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற அதன் முதல் போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. மேலும் ஓப்பனராக களம் இறங்கி விளையாடிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார். இவருடன் ஸ்ரேயாஸ் ஐயரும் கலக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் ரன் ரேட்டிங்கை அதிகப்படுத்தி இருந்தார்.

அந்த வகையில் ரோஹித் சர்மா 32 பந்துகளுக்கு 44 ரன்களையும் இஷான் கிஷன் 56 பந்துகளுக்கு 89 ரன்களையும் ஸ்ரோயாஸ் ஐயர் 28 பந்துகளுக்கு 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அடித்து 57 ரன்களை குவித்தார். இதனால் இந்தியா 20 ஓவர் முடிவில் 199 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில் 200 என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை வீரர்கள் இந்திய பவுலர்களின் அதிரடியை தாங்க முடியாமல் திணறினர். இதையடுத்து இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 137 ரன்களுடன் தோல்வியடைந்தது.

அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணியில் இடம்பெற்று விளையாடிய ஆல்ரவுண்டர் ஜடேஜா இலங்கையின் நட்சத்திர வீரரான சந்திமாலின் விக்கெட்டை அசால்ட்டாக தூக்கினார். அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் “புஷ்பா“ திரைப்படத்தில் தனது தாடையை நீவுவது போன்றே ஜடேஜாவும் தனது தாடையை நீவிக்காட்டி சந்திமாலின் விக்கெட்டை கொண்டாடினார். இவருடைய செய்கையை விசித்திரமாக பார்த்த கேப்டன் ரோஹித் சர்மா அவரைக் கட்டித்தழுவி பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜடேஜா இலங்கைக்கு எதிரான போட்டியில் புஷ்பா ஸ்டைலில் விக்கெட்டை கொண்டாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் படு வைரலாக வருகின்றன. மேலும் ஒருசில ரசிகர்கள் “புஷ்பானா பிளவர் இல்லடா… ஃபயர்“ என்று வாசகத்துடன் ஜடேஜாவின் புகைப்படத்தை பகிர்ந்தும் வருகின்றனர். இன்னும் ஒருசிலர் “சர் ரவீந்திர புஷ்பா“ என்றொரு புதிய பட்டத்தை அவருக்கு சூட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment