ஜாக்கியாகிவிட்ட ரவீந்திர ஜடேஜா… அசத்தலான வீடியோ வைரல்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக அசத்திவரும் ரவீந்திர ஜடேஜா தற்போது குதிரை ஜாக்கியாக மாறியிருக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தென்ஆப்பிரிக்க அணியில் இடம்பெறாத நிலையில் தற்போது குதிரைகளை வைத்து பயிற்சி பெறும் வீடியோ வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் சந்தேகத்தோடு கூடிய உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்துவரும் ரவீந்திர ஜடேஜா நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகவுள்ளார் என்பது போன்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

இதை உறுதிப்படுத்தும் விதமாக தென்ஆப்பிரிக்க அணியில் இவருடைய பெயர் இடம்பெறவில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளார் என்பது போன்ற தகவல்கள் கூறப்படுகின்றன. இன்னொரு பக்கம் காயம் காரணமாக விலகியிருக்கும் ஜடேஜா அறுவைசிகிச்சை செய்துகொண்டு தன்னுடைய உடற்தகுதியை விரைவில் நிரூபித்து காட்டுவார்.

இதனால் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என்றும் விரைவில் இந்திய அணிக்கு அவர் திரும்பி வருவார் என்றும் கூறப்படுகின்றன. இந்நிலையில் ஜாம்நகரில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் குதிரைகளை வைத்து பயிற்சி எடுத்துவருகிறார். இதுகுறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

33 வயதாகும் ஜடேஜா இந்திய அணிக்காக 57 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியல் விளையாடியுள்ளார். இதில் 17 அரைச்சதம் மற்றும் 2,195 ரன்களை குவித்து இருக்கிறார். அதேபோல பவுலிங்கில் 232 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.