ஒரு நூற்றாண்டுக்கு இந்த ஸ்டில்லை மறக்க முடியாது: இன்ஸ்டாகிராம் முகப்பு பக்கததை மாற்றிய ஜடேஜா..!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் டைட்டில் பட்டம் வென்ற நிலையில் இந்த டைட்டில் பட்டம் பெற முக்கிய காரணமானவர்களில் ஒருவர் ஜடேஜா என்பதும் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்து அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் உலக கோப்பை உட்பட எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தாலும் கூட உணர்ச்சிவசப்படாத தோனியே கூட ஜடேஜாவை அலேக்காக தூக்கி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வந்தன. தோனியின் முகத்தில் இந்த அளவிற்கு ஒரு சந்தோஷம், பூரிப்பை இதுவரை ரசிகர்கள் மட்டுமின்றி சக அணியினர் கூட பார்த்ததில்லை.

இந்த நிலையில் ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி தன்னை தூக்கி வைத்த ஸ்டில்லை முகப்பு பக்கத்தில் வைத்துள்ளார். இந்த ஸ்டில் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு பேசப்படும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூண்களில் ஒருவரான ஜடேஜா இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

முதல் நாள் பள்ளிக்கு சென்ற மேக்னா ராஜ் மகள்.. நெகிழ்ச்சியான பதிவு..!

நடிகை மேக்னா ராஜ் தனது மகன் முதல் நாள் பள்ளிக்குச் சென்ற புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

'மார்கழி திங்கள்' படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய லைட்மேன்..!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மார்கழி திங்கள்'. இயக்குனர் சுசீந்திரனின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே உள்ள

ஐபிஎல் ஃபைனல் பார்வையாளர்கள்: ஜியோ சினிமா சாதனை..!

நேற்று அதிகாலை நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதியபோது ஜியோ சினிமா தளத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை சாதனை படைத்துள்ளது. 

நடிகை சாய் பல்லவி மீது எனக்கு கிரஷ்? மனம் திறந்த பாலிவுட் பிரபலம் பற்றிய சுவாரசிய தகவல்!

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நடிகை சாய்பல்லவி மீது தனக்கு கிரஷ் இருப்பதாக பாலிவுட் நடிகர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்

நான் பொய் சொல்ல விரும்பவில்லை, எனக்கும் முதலமைச்சர் ஆசை உள்ளது: பிரபல தமிழ் நடிகர்..!

எனக்கு முதலமைச்சர் ஆகும் ஆசை உள்ளது, முதலமைச்சர் ஆசை இல்லை என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை