சீமானுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா? பரபரப்பை கிளப்பும் அரசியல் வீடியோ!
- IndiaGlitz, [Wednesday,March 31 2021]
தமிழ் தேசியம், ஈழ மக்களுக்கு ஆதரவு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு கடந்த 2010 ஆம் ஆண்டு சீமான் உருவாக்கிய கட்சிதான் நாம் தமிழர் கட்சி. இது மறைந்த செய்திநிறுவனர் சி.பா ஆதித்தனார் நடத்தி வந்த நாம் தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியாகவே இந்தக் கட்சி தமிழகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் சீமான் அவர்களை அரசியல் விமர்சகர்கள் சிலர் பாஜகவின் பி டீம் என விமர்சித்து வருகின்றனர். மேலும் இவர் பாஜகவின் கொள்கைகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் சீமான் தமிழகத்தின் மூத்த பெரும் அரசியல் தலைவர்களான கலைஞர் கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா போன்றவர்களை எதிர்க்கொண்டு அரசியலில் தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்து மிக நேர்த்தியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளார்.
இந்நிலையில் மூத்த தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அடுத்தத் தலைமுறை தலைவர்கள் அனைவரும் தங்களை முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்திக் கொண்டு தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒரே மாதியான வாக்கு வித்தியாசங்களைக் கொண்டு 3.8% வாக்குகளை பெற்று இருக்கும் சீமான் தற்போதைய தேர்தலை எவ்வாறு எதிர்க்கொள்ள போகிறார்? ஒருவேளை 5 முனை போட்டி நிலவுகின்ற இந்தத் தேர்தலில் சீமானின் வியூகம் பொய்த்துப் போய்விடுமா என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்து நமக்கு பிரத்யேக நேர்காணல் வழங்கியுள்ளார் பிரபல அரசியல் விமர்சகர் திரு ரவீந்திரன் துரைசாமி.
இளைஞர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுகிற திரு சீமான் இந்தத் தேர்தலுக்காக திருவொற்றியூர் தொகுதியில் நிற்கிறார். அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மேலும் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி எத்தனை இடங்களில் வெற்றிப் பெறும்? பெரும் கட்சிகள் எதுவும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்காத நிலையில் பெண்களுக்கு அதிக இடம் ஒதுக்கி இருக்கும் நாம் தமிழர் கட்சியில் எத்தனை பெண்கள் வெற்றிப்பெறுவார்கள் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு ரவீந்திரன் துரைசாமி விளக்கம் அளித்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிக கவனம் பெற்று இருக்கிறது.